
கோலாலம்பூர், ஜூன் 21 – காஜாங்கில் நேற்று காலை அடுக்ககத்தின் கார் நிறுத்துமிடத்தின் அருகே சாலையோரத்தில் கண்டுடெடுக்கப்பட்ட ஆண் குழந்தை ஒன்று செர்டாங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் இறந்து போனது.
அக்குழந்தை தொடர்பில் நேற்று காலை மணி 7.07 அளவில் 51 வயதுடைய ஆடவர் ஒருவர் போலீசில் புகார் செய்திருந்தார்.
தொப்புள் கொடி இன்னமும் அகற்றப்படாத நிலையில் கண்டெடுக்கப்பட்ட அந்த குழந்தையின் உடலில் எந்தவொரு துணியும் இல்லை.
மருத்துவமனைக்கு கொண்டுச் செல்வதற்கு முன்னதாகவே அக்குழந்தையின் நிலைமை மிகவும் மோசமாக இருந்த நிலையில் அருகில் எந்தவொரு குறிப்பும் காணப்படவில்லை.
இதனிடையே காலை மணி 10.35 அளவில் அந்த குழந்தை இறந்ததாக மருத்துவமனை அறிவித்தது.
தற்போது அந்த குழந்தையின் உடலில் சவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.