காஜாங், மே 3 – சிலாங்கூர், காஜாங்கிலுள்ள, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், பூனைக்குட்டிக்கு உயிரோடு எரியூட்டிய குற்றச்சாட்டை, 13 வயது மதிக்கத்தக்க பதின்ம வயது இளைஞன் ஒருவன் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டான்.
இன்னும் கைதுச் செய்யப்படாமல் இருக்கும் இதர இரு நபர்களுடன் இணைந்து அவன் அக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 22-ஆம் தேதி, நண்பகல் மணி 1.08 வாக்கில், மிகவும் கொடூரமான முறையில், பூனைக்குட்டி ஒன்றுக்கு எரியூட்டியுள்ளனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரிங்கிட் முதல் அதிகபட்சம் ஒரு லட்சம் ரிங்கிட் வரையிலான அபராதம் அல்லது மூன்றாண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
சம்பந்தப்பட்ட இளைஞனை இன்று ஆயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையில் விடுவிக்க நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கிய வேளை ; இவ்வழக்கிற்கான தண்டனை ஜூன் 27-ஆம் தேதி அறிவிக்கப்படும்.
முன்னதாக, அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில், மூவர் இணைந்து, பூனைக்குட்டிக்கு எரியூட்டும் கானொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி கடும் கண்டனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.