காஜாங், அக்டோபர் 4 – தேசிய பூப்பந்தாட்ட வீரர் Samuel Lee-யால் கொடுமைப்படுத்தப்பட்ட Kister எனும் ஹஸ்கி ரக நாய் தனது புதிய உரிமையாளரை தேடுகிறது.
சிலாங்கூர் கால்நடை மருத்துவ சேவைத் துறை, அதன் தத்தெடுப்பு காலக்கெடுவை அக்டோபர் 8ஆம் திகதி வரை நீடித்துள்ளது.
இந்நிலையில், ஆர்வமுள்ள மற்றும் தகுதியான பொதுமக்களை விண்ணப்பிக்க அச்சேவை மையம் ஊக்குவிக்கிறது.
முன்னதாக, இவ்வாண்டு ஜூலை மாதத்தில் அந்த ஹஸ்கி ரக நாயைச் சரமாரியாக அதன் உரிமையாளர் அடித்துக் கொடுமைப்படுத்தும் காணொளி ஒன்று வைரலாகியது.
அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு காஜாங் நீதிமன்றம் 25,000 ரிங்கிட் அபராதம் விதித்து தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.