காஜாங், பிப் 3 – வாகனங்களைத் திருடி வந்ததோடு, வர்தக தளங்களில் புகுந்து கொள்ளையடித்தும் வந்த கும்பலின் நடவடிக்கையை காஜாங் போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், Taman Kasturi Cheras, Persiaran Tasik Kesuma Beranang ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர்.
அந்த கைது நடவடிக்கையின்போது, காஜாங், Batu 14 பகுதிகளில் காணாமல் போன Toyota வேன் ஒன்றும், Honda EX5 வகையைச் சேர்ந்த 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக, காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் Mohd Zaid Hassan தெரிவித்தார்.