காஜாங், ஆகஸ்ட் -20, சிலாங்கூர், காஜாங்கில் husky ரக நாயை அடித்து சித்ரவதை செய்ததாக அழைப்பாணை கொடுக்கப்பட்ட ஆடவருக்கு எதிராக கைது ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று நீதிமன்றத்திற்கு வந்திருக்க வேண்டிய அந்நபர், வழக்கறிஞரை மட்டுமே அனுப்பியிருந்ததால், காஜாங் செஷன்ஸ் நீதிமன்றம் கைது ஆணையை வெளியிட்டது.
கால்நடை சேவைத் துறை (DVS) அத்தகவலை உறுதிப்படுத்தியது.
இதையடுத்து அவ்வழக்கு வரும் ஆகஸ்ட் 30-ல் மறுசெவிமெடுப்புக்கு வருமென நீதிபதி அறிவித்தார்.
காஜாங்கில் உள்ள அடுக்குமாடி வீட்டில் வைத்து husky வகை நாயை, அதன் உரிமையாளர் என நம்பப்படும் ஆடவர் சித்ரவதை செய்த வீடியோ முன்னதாக வைரலானது.
இதையடுத்து 2015 விலங்குகள் நலச்சட்டத்தின் கீழ் DVS விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 1 லட்சம் ரிங்கிட்டும் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.