காஜாங், ஆகஸ்ட் -30 – சிலாங்கூர், காஜாங்கில் வளர்ப்பு நாயை சரமாரியாகத் தாக்கியக் குற்றத்திற்காக, தொழில்முறை பூப்பந்தாட்டாக்காரருக்கு 25,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
21 வயது சேமுவல் லீ (Samuel Lee) அபராதத்தைச் செலுத்தத் தவறினால், 6 மாத சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டுமென காஜாங் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜூலை 1-ம் தேதி, காஜாங், Landmark Residence குடியிருப்பின் பால்கனியில் அக்குற்றத்தைப் புரிந்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
Husky ரக நாயின் முகத்தில் தனது கைகளால் சேமுவல் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வைரலாகி கடும் கண்டனத்தைப் பெற்றது.
அந்த வீடியோவை அண்டை வீட்டுக்காரர் பதிவுச் செய்ததாகத் தெரிகிறது.
நெட்டிசன்களும் அந்நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினர்.
அச்சம்பவத்தைக் கடுமையாகச் சாடிய மலேசிய விலங்குகள் நலச் சங்கம், அந்நபர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டே ஆக வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.