
காஜாங், மார்ச் 8 – காஜாங் உத்தாமாவில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா கருமாரியம்மன் ஆலயத்தில் இம்மாதம் 18 ஆம் தேதி சனிக்கிழமை, பாலஸ்தாபன நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெறவிருக்கிறது. மாலை மணி 4 முதல் இரவு 9 மணிவரை நடைபெறும் இந்த நிகழ்வில் சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினரும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினருமான கணபதி ராவ் சிறப்பு வருகை புரிவார். எனவே இந்த நிகழ்வில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி ஆலய தலைவர் எஸ் .எம் கதிர்வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.