Latestமலேசியா

காஜாங் சிறையில் நஜீப் தொடர்ந்து இருந்து வருவார்

கோலாலம்பூர், ஆக 25 – டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் தொடர்ந்து காஜாங் சிறையிலேயே இருந்து வருவார். அவரை வேறு சிறைச்சாலைக்கு மாற்றும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லையென நஜீப்பின் சிறப்பு அதிகாரி அகமட் லுட்பி அஸார் கூறினார். தமக்கு தெரிந்தவரை அவர் தொடர்ந்து காஜாங் சிறையில் இருப்பார் என அவர் தெரிவித்தார். தமது அதிகாரத்தை பயன்படுத்தி 1 எம்.டி.பியின் 2.3 பில்லியன் ரிங்கிட்டை பெற்றது தொடர்பான வழக்கு விசாரணைக்காக இன்று காலை காஜாங் கிறையிலிருந்து கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு நஜீப் கொண்டு வரப்பட்டார். எஸ்.ஆர்.சி இண்டர்நேசனல் ஊழல் வழக்கில் 12 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 210 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை கூட்டரசு நீதிமன்றம் நிலைநிறுத்தியதைத் தொடர்ந்து நஜீப் செவ்வாய்க்கிழமை முதல் காஜாங் சிறையில் இருந்து வருகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!