
காஜாங், பிப் 2 – காஜாங் தமிழ்ப்பள்ளியில் பழுதடைந்துள்ள பழைய கட்டிடத்தை சீரமைப்பதற்காக கல்வித்துறை துணையமைச்சர் Lim Hui Ying ஒரு லட்சம் ரிங்கிட் மான்யம் வழங்குவதற்கு உறுதியளித்திருப்பதை அப்பள்ளியின் தலைமையாசிரிர் விஜயலட்சுமி வரவேற்றுள்ளார். இந்த மான்யத்தின் மூலம் கட்டிடத்தை சீரமைப்பு செய்யும் பணிகளை விரைவாக தொடங்க முடியும் என அவர் கூறினார். மேல் மாடியில் 4 வகுப்புகளை நிர்மாணிக்க முடியும். அவற்றில் இரண்டு பிரத்தியோக வகுப்புகளையும் , 2 கணினி வகுப்புகளையும் உருவாக்க முடியும் என விஜயலட்சுமி தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை பெய்த கடுமையான மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் அப்பள்ளியின் திடலும் அதனை சுற்றியுள்ள கால்வாய் மற்றும் மதில் சுவரும் சேதம் அடைந்துள்ளது. அதனை சீர் செய்வதற்கும் துணையமைச்சர் உதவ முன்வதுள்ளது குறித்தும் பள்ளி நிர்வாகம் மகிழ்ச்சயடைவதாக அவர் கூறினார்.
தமிழப்பள்ளியின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் தமக்கு அதிக அக்கரை இருப்பதாக துணையமைச்சர் தம்மிடம் கூறியதையும் விஜயலட்சுமி நினைவுகூர்ந்தார். அவரது வருகை காஜாங் தமிழ்ப் பள்ளியின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் நல்லதொரு தொடக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார். இதனிடையே முதல் வகுப்புக்கு இதுவரை 155 மாணவர்கள் பதிவு செய்திருப்பதாகவும் இன்னும் தங்களது பிள்ளைகளை பதியாமல் இருக்கும் பெற்றோர்கள் விரைந்து பதிவு செய்யும்படி விஜயலட்சுமி கேட்டுக்கொண்டார்.