லிப்பிஸ், ஜன 8- ஜாலான் லிப்பிஸ் – Benta சாலையின் 7 ஆவது கிலோமீட்டரில் டிரக் லோரியை தடுத்து நிறுத்திய போலீசார் அதிலிருந்த பல்வேறு வகையான 494 பறவைகளை பறிமுதல் செய்ததோடு அந்த டிரக் ஓட்டுனரையும் கைது செய்தனர். நேற்றிரவு 9.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது அந்த டிரக்கில் இருந்த 200 கூண்டுகளில் பல்வேறு அளவுகளில் பறவைகள் இருந்ததாக கோலா லிப்பிஸ் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Ismail Man தெரிவித்தார்.
அந்த லோரி கிளந்தானின் கோத்தாபாருவிலிருந்து சிலாங்கூரின் ஷா ஆலாமை நோக்கி சென்று கொண்டிருந்தபோது தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பறவைகளும் 2010 ஆம் ஆண்டின் பாதுகாக்கப்பட்ட பறவைகளாக பட்டியலிடப்பட்டவை. பல இடங்களிலிருந்து இந்த பறவைகளை லோரி ஓட்டுனர் ஏற்றியிருப்பது முன்னோடி விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாக இஸ்மாயில் மான தெரிவித்தார்.