Latestஉலகம்

காட்டுத் தீயை கட்டுப்டுத்துவதில் ஸ்பெய்ன் – போர்த்துகல் போராடி வருகின்றன.

மெட்ரிட், ஆக 17 – பெரிய அளவில் காட்டுத் தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து அதனை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதில் ஸ்பெய்னும் அதன் அண்டை நாடான போர்த்துகலும் போராடி வருகின்றன. காட்டுத் தீயினால் மூவர் காயம் அடைந்தனர். ஸ்பெய்னின் தென்கிழக்கு பகுதியில் பெரிய அளவில் காடுகள் எரிவதால் அதனை அணைப்பதற்கு 300க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வீரர்கள் நேற்று இரவு முழுவதிலும் போராடினர். சுமார் 10,000 ஹெக்டர் காட்டுப் பகுதியில் தீ வேகமாக எரிந்து வருவதால் அப்பகுதிக்குள் உள்ளே ஊடுருவுவதில் தீயணைப்பு படையினர் சிக்கலை எதிர்நோக்கியுள்ளதக அதிகாரிகள் தெரிவித்தனர். சனிக்கிழமையன்று பின்னிரவில் Valencia வட்டாரத்தில் மின்னல் தாக்கியதைத் தொடர்ந்து காட்டுத் தீ பரவியது. இதனால் 1,500க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருக்கும் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!