Latestமலேசியா

காணாமற்போன மாற்றுத் திறனாளி மலையேறியை தேடுவது சிக்கலாகும்

கோலாலம்பூர், மே 22 – மாற்றுத் திறனாளி மலையேறியான Muhamammad Hawari நேப்பாளத்தின் Lhotse மலையடிவாரத்தில் விழுந்திருந்தால் அவரை மீட்புக் குழுவினர் தேடிக் கண்டிப்பிடிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கக்கூடும் என கூறப்படுகிறது. Lhotse மலைப்பகுதி மிகவும் செங்குத்தானதாகும். அந்த மலைப்பகுதியிலிருந்து கீழே விழுபவர்கள் மலையின் கீழ்த்தளத்தில் உள்ள பணியாற்றில் விழுந்திருக்கும் வாய்ப்பு உள்ளதாக எவரெஸ்ட் சிகரத்தை முதன் முதலில் ஏறி மலேசியாவுக்கு பெருமை சேர்ததவரான M. Mahendran தெரிவித்தார். எவரெஸ்ட் மலையிலுள்ள Lhotse மலையின் அடிவாரம் சற்று அகலமான இடமாகும். அங்கு மேற்கொள்ளப்படும் தேடும் நடவடிக்கை கூடுதல் சிரமமாகும் என பெர்னாமாவுக்கு வழங்கிய நேர்க்காணலில் மகேந்திரன் கூறினார். அதுவும் கீழே விழுந்தவர்கள் பனி பிளவுகளில் விழுந்திருந்தால் மீட்பு முயற்சிகள் மிகவும் சிரமமாகும்.

 

அதே வேளையில் Lhotse மலைப்பகுதியிலிருந்து கீழே இறங்கும்போது Muhammad Hawari போதுமான பிராணவாயுவை கொண்டிருந்தரா என்பது முக்கியமாகும். எவரெஸ்ட் மலையேறும்போது அவர் கொண்டுச் சென்ற பிராணவாயுவை முழுமையாக பயன்படுத்தியிருந்தால் 4ஆவது கேம்வரை கீழே இறங்குவதற்கு அந்த பிராணவாயு போதுமானதாக இருப்பதால் அவர் புதிய பிராணவாய சாதனத்தை மாற்றியிருக்கலாம் என மகேந்திரன் தெரிவித்தார். மலேசியாவின் எவரெஸ்ட் 2023 குழுவைச் சேர்ந்த Muhammad Hawari எவரெஸ்ட் மலை சிகரத்தை வெற்றிகரமாக சென்றடைந்த பின் நான்காவது முகாமிலிருந்த கீழே இறங்கியபோது காணாமல்போனதாக அறிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!