
கோத்தா கினபாலு, ஜன 16 – ஜனவரி 1ஆம் தேதி முதல் காணாமல்போன MV Dai CAT 06 சரக்கு கப்பலை தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடும்படி அக்கப்பலின் ஊழியர் ஒருவரின் குடும்பத்தினர் தேசிய பாதுகாப்பு நிறுவனத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். தமது சகோதரரும் காணாமல்போன கப்பலின் இதர நான்கு ஊழியர்களுக்கும் உதவி தேவைப்படுவதாக கப்பல் ஊழியர் Derrent Littor ரின் சகோதரி Sandra Littor தெரிவித்தார். அந்த கப்பலை தேடும் நடவடிக்கையை தேசிய SAR எனப்படும் தேடும் மற்றும்உதவி அமைப்புக்கான பாதுகாப்பு குழு நிறுத்தியுள்ளது.
இதனிடையே காணாமல்போன அந்த கப்பலில் இருந்த ஊழியர்கள் குறித்து அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் இன்றுவரை சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்தின் அதிகாரிகள் எவரும் தொடர்புகொள்ளாமல் இருப்பது குறித்தும் Sandra Littor தமது கவலையையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளார்.