பெந்தோங், பிப் 18 – இம்மாதம் 10 ஆம் தேதி காணாமல்போன பதின்ம வயதுடைய பவித்ரா இன்னும் கண்டறியப்படவில்லை. Bentong Ketari இடைநிலைப் பள்ளியின் மாணவியான 15 வயதுடைய பி.பவித்ராவை கண்டுப் பிடிக்கும் முயற்சியில் தாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக Bentong மாவட்ட போலீஸ் தலைவர் Superintendent Zaiham Mohd Kahar தெரிவித்தார்.
தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரை தேடும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார். பவித்ராவை விரைவில் கண்டுப்பிடித்து அவரது குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக ஒப்படைப்போம் என Zaiham Mohd Kahar கூறினார்.
பவித்ரா குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள் 09- 2222222 என்ற எண் அல்லது அருகேயுள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் அளிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். பிப்ரவரி 10 ஆம் தேதி பள்ளி முடிந்து பவித்ரா வீடு திரும்புவதற்காக தமது வேனுக்கு திரும்பவில்லையென 60 வயதுடைய வேன் ஒட்டுனர் பவித்ராவின் தந்தைக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார்.