
குவந்தான், ஜூன் 16 – Bentong கில் Chamang நீர்வீழ்ச்சில் குளித்துக்கொண்டிருந்தபோது காணாமல்போன மாணவன் ஒருவன் மூழ்கி மாண்டான். 19 வயதுடைய Muhamad Akmal Husni யின் உடல் இன்று காலை மணி 9.52 அளவில் மீட்கப்பட்டதாக Pahang தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். நீர் வீழ்ச்சியில் Muhamad Akmal விழுந்த இடத்திலிருந்து 5 கிலோமீட்டருக்கு அப்பால் அவரது உடல் மீட்கப்பட்டது. பேராவில் சமயப் பள்ளியில் பயின்று வந்த அந்த மாணவன் இதர 14பேருடன் நான்கு நாள் முகாமிற்கு சென்றிருந்தபோது நீர்வீழ்ச்சியி மூழ்கி மாண்டான்.