Latestமலேசியா

உரிமம் இல்லாத 28 வாடகை மின்-ஸ்கூட்டர்கள் ; பறிமுதல் செய்தது பினாங்கு நகராண்மைக் கழகம்

ஜோர்ஜ் டவுன், மார்ச் 11 – பினாங்கில், முறையான உரிமம் இன்றி செயல்பட்டு வந்த வாடகை மின்-ஸ்கூட்டர் மையத்தில், நேற்று பினாங்கு நகராண்மைக் கழகம் அதிரடி சோதனையை மேற்கொண்டது.

ஆர்மேனியா வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்த சோதனையின் போது, கடையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த உரிமம் இல்லாத 28 மின்-ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சம்பந்தப்பட்ட வளாகத்தில், வாடகை சைக்கிள் கடை என்ற போர்வையில், உரிமம் இல்லாத மின்-ஸ்கூட்டர்கள் வாடகைக்கு விடப்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.

சோதனைக்கு முன் மேற்கொள்ளப்பட்ட உளவு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையின் போது, அக்கடையிலிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட மின்-ஸ்கூட்டர் ஒன்று, கார் ஒன்றை மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

அதே சமயம், நெரிசல் மிகுந்த சாலைகளில் அந்த மின்-ஸ்கூட்டர்கள் அபாயகரமான முறையில் செலுத்தப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

இவ்வேளையில், அண்மையில் பினாங்கு நகராண்மைக் கழகம் மேற்கொண்ட இதர இரு வேறு சோதனைகளில், மொத்தம் 69 உரிமம் இல்லாத மின்-ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!