
ஆஸ்திரேலியா, சிட்டினியில், கடந்த மாதம் 29-ஆம் தேதி காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட 65 வயது மீனவர் ஒருவரின் உடல் பாகங்கள், இரு முதலைகளின் வயிற்றில் அடையாளம் காணப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவ்விரு முதலைகளும், சம்பந்தப்பட்ட ஆடவரை தாக்கி கொன்று இரையாக்கி இருக்கலாம் என நம்பப்படுகிறது.
மீனவரை தேடும் பணிகளின் போது அடையாளம் காணப்பட்ட அவ்விரு முதலைகளையும் பின்னர் ஆஸ்திரேலிய சுற்று சூழல், வனவிலங்கு துறை அதிகாரிகள் கொன்றதை தொடர்ந்து, மீனவர் காணாமல் போன சம்பவத்திற்கு தீர்வுக் காணப்பட்டதாக கூறப்படுகிறது.