மலாக்கா, பிப் 15 – முதியவர் ஒருவர் காணாமல் போயிருப்பதாக புகார் கொடுக்கப்பட்டு 2 வாரங்களுக்குப் பின்னர், அவரது எலும்புகூடு கண்டெடுக்கப்பட்டது.
மலாக்கா, ஜாலான் தெங்கெரா-வில் ( Jalan Tengkera ) தங்கும் விடுதி ஒன்றின் அருகில் திறந்த வெளியில், மனிதரின் மண்டை ஓடும் , எலும்பு கூடும் கண்டுபிடிக்கப்பட்டதாக, Melaka Tengah மாவட்ட போலீஸ் தலைவர் கிறிஸ்டோஃபர் பதித் (Christopher Patit ) தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த ஜனவரி 31-ஆம் தேதி , வயது மூப்பினால் , ஞாபக மறதியால் பாதிக்கப்பட்ட 87 வயதான அந்த முதியவர் காணாமல் போனதாக புகார் பெறப்பட்டதாக அவர் கூறினார்.
வீட்டிலிருந்து நடந்து சென்ற அந்த முதியவர் புதர் பகுதியில் தடுமாறி விழுந்து இறந்திருக்கலாமென போலீசார் நம்புகின்றனர்.