தாய்லாந்து, ஆகஸ்ட் 14 – மலேசியப் பெண் ஒருவர், காணொளி உருவாக்கும் முயற்சியில், தாய்லாந்தில் ஓடும் ரயிலில் தலையை வெளியிட்டு கம்பத்தில் மோதி, தீவிரமாகக் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காணொளியில், அந்தப் 19 வயது பெண் ஓடும் ரயில் படிக்கட்டுகளில் கீழே இறங்கி, உடலைச் சிறிது வெளியே சாய்த்துக் கொள்கிறார்.
அப்போது, அவரது, தலை கம்பத்தில் மோதி, Phatthalung நிலையத்தில் தடுமாறி நிற்கும் காட்சிகள் அந்த காணொளியில் பார்க்கமுடிகிறது.
காயங்கள் ஏற்பட்ட வீங்கிய தலையால் அவதிப்பட்ட அந்த காணொளி வைரலான பிறகு, தாய்லாந்து மாநில ரயில்வே, இந்த சம்பவம் குறித்து விரிவாகத் தனது முகநூலில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடந்த அந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக, அப்பெண்ணுக்குத் தலையைத் தவிர வேறு, உள் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பயணிகளுக்குப் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகத் தாய்லாந்து மாநில ரயில்வே தகவல் வெளியிட்டது.