
கோலாலம்பூர், ஆக 19 – காதலர்களிடையே ஊடல் ஏற்படும்போதெல்லாம், அவர்களிடையே தகவலை பறிமாற்ற இடையில் யாரையாவது பயன்படுத்துவது என்பது இயல்பு. அன்றைய காலத்தில் புறா தொடங்கி, நாய், நண்பர்கள், சகோதரர்கள் என்றோரையெல்லாம் கடந்து பின்னர் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் தற்போது சமூக வலைத்தளங்கள் இந்த உதவியை புரிந்து வருகின்றன என்றே சொல்லமாம்.
இந்நிலையில், தன் காதலியிடையே ஏற்பட்ட ஊடலில், அவருடன் தொடர்புக் கொள்ள சமூக வலைத்தளங்கள் உட்பட அனைத்து வழிகளும் காதலியால் முடக்கப்பட்ட நிலையில், ஒரு புது யுக்தியை கையாண்டுள்ளார் இந்த காதலன். இணைய ஆர்டர் மூலம் எதை வேண்டுமென்றாலும் டெலிவரி செய்யலாம் என கேலி செய்யப்பட்டு வருவதை உண்மையாக்கி இருக்கின்றார் இவர்.
காதலிக்குப் பிடித்த “starbucks” காப்பியை ஆர்டர் செய்த அந்த காதலன், அதில் அப்பெண்ணின் பெயரோடு சேர்த்து தனது காதல் தகவலையும் எழுதும் படி இணையம் ஆர்டர் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார். வேலைப்பளு காரணமாக அந்த கோரிக்கையைக் தட்டிக் கழிக்காமல், இந்த காதலர்களை சேர்த்து வைக்கும் தனது பங்காக அந்த கோரிக்கையை நிறைவேற்றியிருக்கின்றார் “starbucks” காப்பி கடையின் ஊழியர் ஒருவர்.
பின்னர் தனது இந்த புது விதமான அனுபவத்தை அந்த ஊழியர் Taaararichie (தாரா ரிச்சி) எனும் டிக்டோக்கில் பதிவு செய்தது, தற்போது இணையவாசிகளின் கவனத்தை பெற்றுள்ளது.