Latestமலேசியா

காதலர்களுக்கு இடையில் தகராறு; கத்தி குத்து காயங்களுடன்  உடல்கள் மீட்பு  

மலாக்கா , பிப்  20 – காதலர்களுக்கு இடையிலான  தகராறு இறுதியில்  கொலையில் முடிந்துள்ளது.  மலாக்கா, தாமான் மெர்டேக்கா வீடமைப்பு பகுதியில் நிகழ்ந்த  சம்பவத்தில்,  காதலன்  காதலியை  கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு, பின்னர்  தன்னை தானே  குத்தி கொண்டு  தற்கொலை செய்துக் கொண்டதாக நம்பப்படுகிறது.

20 வயது மதிக்கத்தக்க காதலர்களை உட்படுத்திய அந்த சம்பவம்  நேற்று மாலை மணி நான்களவில் நிகழ்ந்ததாக  மலாக்கா தெங்கா ( Melaka Tengah ) மாவட்ட போலீஸ் தலைவர் கிறிஸ்டபர்  பதித் தெரிவித்தார்.

பூட்டப்பட்டிருந்த வீட்டிற்குள் தீயணைப்பு படையினரின் உதவியுடன்  புகுந்த போலீசார் இரு உடல்களை கண்டெடுத்தனர். கொலையுண்ட பெண் முன்னதாக, தனது காதலருடன்  சண்டை ஏற்பட்டிருப்பதாக, தனது நண்பரை அழைத்து உதவி கேட்டுள்ளார். அதன் அடிப்படையில் இறந்த  இருவருக்கும் இடையிலான உறவில் பிரச்சனை இருந்திருக்கலாமென போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அதே வேளை, இறந்த ஆடவரின்  அருகில்  மண்ணெண்ணெய் இருந்ததாகவும்  அதை அந்நபர் குடித்திருக்கலாமெனவும் நம்பப்படுகிறது.  இவ்வேளையில் பெண்ணின்  மைசெஜாத்ராவை சோதனையிட்டதில், அப்பெண்ணுக்கு கோவிட் தொற்று கண்டிருப்பதும் தெரிய வந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!