
சீனா, ஜன 12 – உணவாக மீ பரிமாரப்பட்ட சம்பவம் இரு காதலர்களை பிரித்துள்ளது.
இது கட்டுக்கதை என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது உண்மையிலே சீனாவில் நிகழ்ந்த ஒரு சம்பவமாகும்.
20 வயதான பெண் ஒருவர், முதல் முறையாக தன் காதலரின் பெற்றோரை காண, இரண்டரை மணி நேரம் பயணம் செய்து அவர்களின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு, அவருக்கு மீ, முட்டை, கஞ்சி என மிக எளிமையான உணவு வகைகள் மட்டுமே பரிமாறப்பட்டுள்ளது. அதுமட்டுமா, இரு நாட்கள் அங்கு தங்கியிருந்த அவருக்கு தொடர்ந்து எளிமையான உணவு என அவருக்கு பிடிக்காத உணவுகளே பரிமாரப்பட்டதாம்.
இதனால் ஏமாற்றம் அடைந்த அப்பெண், வீடு திரும்பியதுடன் காதலருடன் உறவை முடித்துக் கொண்டுள்ளதோடு இது குறித்து தமது சமூக ஊடகத்தில் புகைப்படத்தோடு தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார்.
சமூக ஊடகத்தில் அவரது பதிவை இதுவரை 70 லட்சம் பேர் பார்த்துள்ள வேளை, நான்காயிரத்து 300-ருக்கும் அதிகமான கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலானோர், அப்பெண்ணின் முடிவை ஆதரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.