
பேராக், ஈப்போவில், தனது காதலியின் நான்கு வயது பிள்ளையை துன்புறுத்தி வந்ததாக நம்பப்படும் ஆடவன் ஒருவனுக்கு எதிராக இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
இவ்வாண்டு ஏப்ரல் தொடங்கி, தாமான் சாதாவிலுள்ள, வீடொன்றில், 37 வயது அப்துல் ரஹ்மான் அப்துல்லா எனும் அந்த ஆடவன் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அவ்வாடவனுக்கு எதிராக, 2001-ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்ட வேளை ; குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது ஐம்பதாயிரம் ரிங்கிட்டிற்கு மேற்போகாத அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
இவ்வழக்கு விசாரணை ஜூன் 19-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.