கோலாலம்பூர், ஏப்ரல் 8 – காதலியின் நான்கு வயதுப் பெண் பிள்ளையிடம் ஆபாச சேட்டைப் புரிந்த ஆடவன் கோலாலம்பூரில் கைதாகியுள்ளான்.
அவ்வாடவன் தன்னைத் தொட்டு முத்தமிட்டதாக பிள்ளைக் கூறியதை அடுத்து அதிர்ச்சியடைந்த 32 வயது அப்பெண் போலீசில் புகார் செய்திருக்கின்றார்.
மெலாவாத்தியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மார்ச் 28-ஆம் தேதி அச்சம்பவம் நிகழ்ந்ததாக புகாரில் கூறப்பட்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று 37 வயது அந்நபர் கைதானதாக Ampang Jaya மாவட்ட OCPD Asst Comm Mohd Azam Ismail கூறினார்.
அவன் ஏற்கனவே அப்பிள்ளையின் நெஞ்சுப் பகுதியில் அடித்திருப்பதும் அம்பலமானது.
பழையக் குற்றப்பதிவுகள் எதுவும் இல்லையென்றாலும் அவன் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
சந்தேக நபர் விசாரணைக்காக ஏப்ரல் 12 வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.