நியு யோர்க், மார்ச் 1 – நீங்கள் ஒரு பெண்ணை விரும்போது அவரை குடும்பத்தாரிடம் அறிமுகப்படுத்தி வைக்க நினைப்பீர்கள். ஆனால் அதற்கு அந்த பெண் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தால் என்ன செய்வீர்கள் ?
அத்தகைய ஒரு பிரச்சனையை எதிர்நோக்கியிருந்த ஆடவர் ஒருவர், அப்பெண் வேலை செய்யும் உணவகத்திற்கே தனது குடும்பத்தார் அனைவரையும் அழைத்து சென்று உணவருந்தியதாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Reddit அகப்பக்கத்தின் மூலமாக தனது கதையைப் பகிர்ந்து கொண்ட அந்த ஆடவர், பணியில் இருந்த தனது காதலியை குடும்பத்தாருக்கு பிடித்துப் போனதாகவும், உணவருந்திய பின்னர் காதலிக்கு மிக பெரிய Tipவெகுமதியை வைத்து விட்டு சென்றதாகவும் கூறியுள்ளார்.