
அமெரிக்கா, செப் 11 – தன் காதலனுடனான உறவை முறித்துக் கொண்டதால், காதலியின் நிர்வாணப் படங்களை பள்ளியின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்துள்ளான் ஆத்திரமடைந்த காதலன். இதனால், ஒரு பள்ளி ஆசிரியைனான அக்காதலியின் வேலை பறிபோனது.
இச்சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
‘நீ என்னை வேண்டாம் என உறவை முறித்துக் கொண்டதற்குப் பாடமாக உன் பள்ளிக்கு உனது நிர்வாணப் படங்களை அனுப்பியுள்ளேன்’ என மிரட்டி அவ்வாடவன் அதன் படம் ஒன்றையும் அனுப்பியுள்ளான்.
இதனிடையே மூன்று நாள் கழித்து அந்த ஆசிரியையை அலுவலகத்திற்கு அழைத்த பள்ளி நிர்வாகம், நீங்களே வேலையை விட்டு செல்கிறீர்களா அல்லது நாங்கள் பணி நீக்கம் செய்ய வேண்டுமா என இரு தேர்வுகளை வழங்கியுள்ளது.
அப்பெண் போலிஸ் புகார் செய்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 43 வயதான அவ்வாடவன், பின்னர் 10,000 அமெரிக்க டாலர் அதாவது 46,775 ரிங்கிட் ஜாமினில் விடுவிக்கப்பட்டதோடு, அந்தப் பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளான்.