Latestசிங்கப்பூர்

காதல் மோசடியில் பெண்ணை 97,000 டாலர் ஏமாற்றியதாக ஆடவர் மீது 17 குற்றச்சாட்டுகள்

சிங்கப்பூர், நவ 10 – இணையத்தின் மூலம் காதல் மோசடியில் பெண் ஒருவரை
97,000 டாலரை மோசடி செய்த ஷாருல் என்ற ஆடவருக்கு எதிராக சிங்கப்பூர் நீதிமன்றத்தில் 17 மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது.

2022-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்கும் இவ்வாண்டு மார்ச் மாதத்திற்குமிடையே 30 வயதுடைய அந்த ஆடவரின் பேச்சை நம்பி அவரது வங்கிக் கணக்கிற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் 97,000 டாலரை பட்டுவாடா செய்ததாக பாதிக்கப்பட்ட
34 வயதுடைய பெண் தெரிவித்தார்.

இந்த பணத்தை வங்கியில் பரிமாற்றம் செய்வதற்கு தாம் நேர்மையற்ற முறையில் தூண்டப்பட்டதாவும் அந்த பெண் கூறினார்.  புதன்கிழமை கைது செய்யப்பட்ட ஷாருல் குற்றச்சாட்டை மறுத்து விசாரணையை எதிர்நோக்க விரும்புவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த பணத்தை அவர் அன்றாட செலவுகளுக்கும், கடனை அடைப்பதற்கும் பயன்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர். அவர் மீதான வழக்கு விசாரணை டிசம்பர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!