
குவந்தான், மார்ச் 29 – முகநூலில் மூன்று மாதங்களுக்கு முன் அறிமுகமான பெண் ஒருவரிடம் Love Scam மோசடியில் ஆடவர் ஒருவர் 183,000 ரிங்கிட்டை இழந்துள்ளார். அப்பெண் தம்மை காதலிப்பதோடு திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்ததால் அவருக்கு தனிப்பட்ட கடனையும் அந்த ஆடவர் வழங்கியிருக்கிறார். 10முறை அந்த பெண்ணின் வங்கிக் கணக்கில் பணத்தை பட்டுவாடா செய்திருப்பதாகவும் அவற்றில் தமது இ.பி.எப் பணமும் அடங்கும் என பாதிக்கப்பட்ட அந்த ஆடவர் போலீசில் புகார் செய்துள்ளார். மனைவி இறந்ததைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் அறிமுகமான அப்பெண்ணுக்கு அவரது இரண்டு வங்கிக் கணக்கில் அந்த ஆடவர் பணத்தை பட்டுவாடா செய்துள்ளார் என Pahang போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ Ramli Mohamed Yoosuf கூறினார்.