Latestமலேசியா

மார்ச் 25-ஆம் தேதி, பங்குனி உத்திர திருவிழா ; மலேசிய இந்து சங்கம் விளக்கம்

கோலாலம்பூர், பிப்ரவரி 23 – பங்குனி உத்திரம் திருவிழா, மார்ச் 25-ஆம் தேதி கொண்டாடப்படும்.

வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில், மார்ச் 25-ஆம் தேதி, பங்குனி உத்திரம் திருவிழாவை கொண்டாடுவதே சிறப்பனாது என மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் ஸ்ரீகாசி சங்கபூசன் தங்க கணேசன் தெரிவித்தார்.

உத்திர நட்சத்திரம், மார்ச் 24-ஆம் தேதி, காலை மணி 11.14 முதல் மறுநாள் மார்ச் 25-ஆம் தேதி பிற்பகல் மணி 1.46 வரை நீடிக்கிறது.

பங்குனி உத்திரத்தை காலையில் கொண்டாடுவது உத்தமம் என்பதாலும், வாரணாசியில் கடந்தாண்டு ஆகஸ்ட்டு மாதம் நடைபெற்ற பஞ்சாங்க மாநாட்டில் அம்முடிவு எடுக்கப்பட்டதன் அடிப்படையிலும், இவ்வாண்டு பங்குனி உத்திரம் மார்ச் 25-ஆம் தேதி கொண்டாடப்படுமென தங்க கணேசன் தெளிவுப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!