மலாக்கா, ஜனவரி-11, மலாக்கா, தஞ்சோங் கிலிங் போலீஸ் நிலையத்தை நோக்கி சுத்தியலை வீசி கண்ணாடியை உடைத்த மனநலம் பாதிக்கப்பட்ட ஆடவன் கைதாகியுள்ளான்.
வியாழக்கிழமை நள்ளிரவு வாக்கில் தங்கா பத்துவில் உள்ள ஒரு வீட்டில் 25 வயது அவ்விளைஞன் கைதுச் செய்யப்பட்டதாக, மலாக்கா இடைக்கால போலீஸ் தலைவர் Datuk Md Nazri Zawawi தெரிவித்தார்.
காதில் ஏதோ இகரசியக் குரல் கேட்டதாகவும், அது கூறியபடியே சுத்தியலை வீசி எறிந்ததாகவும் தொடக்கக் கட்ட விசாரணையில் அவன் கூறியுள்ளான்.
செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி வாக்கில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், Yamaha Lagenda மோட்டார் சைக்கிளில் வந்தவன், போலீஸ் நிலையத்திற்கு வெளியே அதனை நிறுத்தி விட்டு அவ்வேலையைப் பார்த்துள்ளான்.
அவன் சுத்தியலை எறிந்த போது, புகார் முகப்பிடத்தில் 2 போலீஸ்காரர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் யாரும் காயமடையவில்லை.
சந்தேக நபர் 4 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.