
குவந்தான், மார்ச் 19 – நான்கு நாட்களாக காதுக்குள் மெல்லிய குரல் ஒன்று கேட்டு வந்ததாகக் கூறிய ஆசிரியை ஒருவர், பள்ளிக்கூடத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்து காயமடைந்தார்.
அந்த சம்பவம் , கடந்த வெள்ளிக்கிழமை பகாங், குவந்தானில் உள்ள தேசியப் பள்ளிக்கூடம் ஒன்றில் நிகழ்ந்த வேளை, 28 வயதான அந்த ஆசிரியைக்கு , முகத்திலும், கைகளிலும் காயங்கள் ஏற்பட்டன.
அப்பள்ளிக்கூடத்தில் பாலர் பள்ளி மாணவர்களுக்கு போதித்து வந்த அந்த ஆசிரியை Tengku Ampuan Afzan மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக, குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் Wan Mohd Zahari Wan Busu தெரிவித்தார்.