
ஹனோய் , ஜன 5 – புத்தாண்டுக்கு முதல் நாள் கட்டுமான தளத்தில் 35 மீட்டர் ஆழத்திற்கு தோண்டப்பட்ட concrete துளைக்குள் விழுந்து சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடிய 10 வயது சிறுவன் இறந்ததை வியட்னாம் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். நண்பர்களுடன் பழைய இரும்புகளை சேகரிக்கச் சென்ற அந்த சிறுவன் 25 செட்டிமீட்டர் குறுக்களவை கொண்ட குறுகிய குழிக்குள் விழுந்தான். அந்த சிறுவனை மீட்பதற்காக தீயணைப்பு வீரர்கள் உட்பட மீட்பு குழுவினர் போராடியபோதிலும் அவன் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இறுதி சடங்கிற்காக Ly Hao Nam என்ற அந்த சிறுவனின் உடலை மீட்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்று மாநில அதிகாரி Doan Tan Buu தெரிவித்தார்.