
ஹனோய், ஜன 3 – வியட்னாமில், கட்டுமானத் தளத்தில் , 35 மீட்டர் ஆழத்திற்கு தோண்டப்பட்ட கான்கிரீட் துளைக்குள் விழுந்து சிக்கிக் கொண்ட 10 வயது சிறுவனை மீட்க, மீட்புக் குழுவினர் கடந்த 3 நாட்களாக போராடி வருகின்றனர். நண்பர்களுடன், பழைய இரும்பு பொருட்களைச் சேகரிக்க சென்ற அந்த சிறுவன், வெறும் 25 சென்டிமீட்டர் குறுக்களவை மட்டுமே கொண்ட குறுகிய குழிக்குள் விழுந்தான். தீயணைப்பு வீரர்கள், போலீஸ் அதிகாரிகள் என நூற்றுக்கணக்கானோர், அந்த சிறுவனை மீட்க இரவு பகழ் போராடி வரும் நிலையில், அச்சிறுவனின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.