
காபுல், டிச 3 – ஆப்கானிஸ்தான் தலைநகரில் காபுலில் பாகிஸ்தான் தூதரகம் மீது துப்பாக்கிக் சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதலில் பாகிஸ்தான் காவலாளி காயம் அடைந்தார். பாகிஸ்தான் தூதரை படுகொலை செய்யும் நோக்கத்தோடு அந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் எனினும் தூதர் காயம் அடையவில்லையென பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.