
கிள்ளான் , செப் 3 – Kapar-ரில் ஆடவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டனர். புதன்கிழமையன்று Kapar-ரில் ஜாலான் Hamzah Alang-கில் 36 வயதுடைய ஆடவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயத்தோடு இறந்து கிடந்தது தொடர்பில் இதுவரை அறுவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வட கிள்ளான் போலீஸ் தலைவர் S.Vijaya Rao தெரிவித்திருக்கிறார்.
30 முதல் 40 வயதுடைய அனைத்து சந்தேகப் பேர்வழிகளும் காப்பார் வட்டாரத்தில் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் கொலை குற்றச்சசாட்டு தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேகப் பேர்வழிகளும் இம்மாதம் 5ஆம் தேதிவரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே 12 குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்ட அந்த ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்திற்கு அருகே சிறு விபத்து ஒன்று நடைபெற்றதாகவும் அதன்பின் அங்கு பலமுறை துப்பாக்கி வெடிச் சத்தங்களை பொதுமக்கள் கேட்டதாக தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக Vijaya Rao தெரிவித்தார்.