Latestமலேசியா

காப்புறுதி அதிகாரி ராஜசேகரன் பொன்னுசாமி கடத்தப்பட்டு கொலை?

பந்திங், டிச 3 – கும்பலால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டடதாக நம்பப்படும் சிரம்பானிலுள்ள முன்னணி காப்புறுதி நிறுவனத்தின் நிர்வாகியான 52 வயதுடைய ராஜசேகரன் பொன்னுசாமியின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. சிரம்பான் தாமான் துவாங்கு ஜாபாரைச் சேர்ந்த ராஜசேகரனின் உடல் பந்திங் கம்போங் கஞ்சோங் லாவுட் கடற்கரைக்கு ஒட்டிய ஒதுக்குப்புறமான பகுதியில் உடல் மீட்கப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் தேதி அவரை கும்பல் ஒன்று கடத்திச் சென்றதாக கூறப்பட்டது. நவம்பர் 23 ஆம் தேதியன்று அனாமதேய பேர்வழி ஒருவனிடமிருந்து அவரது குடும்பத்தினர் தொலைபேசி அழைப்பை பெற்றதோடு அந்த நபர் பிணைப்பணம் கோரியதாகவும் கூறப்படுகிறது. ராஜசேகரனின் உடல் பிரேதப் பரிசோதனைக்கான பந்திங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

அவர் காணாமல் போனது குறித்து அவரது மனைவி இதற்கு முன் ஏற்கனவே போலீசில் புகார் செய்துள்ளார். அவரது கார் மற்றும் கை தொலைபேசி பந்திங்கில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் அருகிலேயே அவரது உடல் மீட்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ராஜசேகரனின் உடலை அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டினர். ராஜசேகரனின் கொலை தொடர்பில் போலீசார் பல கோணங்களில் விசாரணையை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!