Latestஉலகம்விளையாட்டு

காமன்வெல்த் கலப்பு பேட்மிண்டன் போட்டி இந்தியாவை வீழ்த்தி மலேசியா தங்கம் வென்றது

பெர்மிங்ஹாம், ஆக 2 – காமன்வெல்த் கலப்பு குழு பிரிவுக்கான பேட்மிண்டன் போட்டியின் இறுதியாட்டத்தில் இந்திய அணியை 3-1 என்ற ஆட்டக் கணக்கில் மலேசியா வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது. மலேசியாவின் Pearly tan – M.Thinnah ஜோடி 21 -18. 21 -17 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியாவின் Tresa Jolly – Gayatri Gopichan இணையை மூன்றாவது ஆட்டத்தில் வென்றதன் மூலம் கலப்பு குழு பிரிவில் மலேசியாவின் தங்கப் பதக்கம் உறுதியானது. இதன்வழி காமன்வெல்த் கலப்பு குழு பிரிவு பேட்மிண்டன் போட்டியில் மலேசியா நான்காவது முறையாக தங்கப் பதக்கத்தை வென்றது. இதற்கு முன் நடைபெற்ற ஒன்றையர் ஆட்டத்தில் Ng Tze Yong 21-19, 8-21. 21-16 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியாவின் K. Srikanth-தை தோற்கடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஒலிம்பிக் போட்டியில் மலேசியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்ற
Aaron Chia -soh wooi Yik ஜோடி இரட்டையர் ஆட்டத்தில் 21-18, 21-15 என்ற புள்ளிக் கணக்கில் Satwik Sairaj -Chirag Shetty- யை இணையை வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் இந்தியாவின் ஒரே வெற்றிப் புள்ளியை பி.வி சிந்து பெற்றார். அவர்
22 -20. 21-17 என்ற புள்ளிக் கணக்கில் மலேசியாவின் Goh Jin wei யை வென்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!