காமன்வெல்த் போட்டியிலிருந்து லீ ஷி ஜியா விலகல்; பலர் ஏமாற்றம்

கோலாலம்பூர், ஜூன் 23 – Birmingham காமன்வெல்த் போட்டிக்கு இன்னும் 35 நாட்கள் எஞ்சியிருக்கும் இவ்வேளையில் தேசிய ஒற்றையர் பேட்மிண்டன் விளையாட்டாளரான Lee Zii Jia அப்போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது அப்போட்டிக்கான மலேசிய விளையாட்டுக் குழுவின் துணைத்தலைவர் Gerard Monteiro உட்பட பலர் ஏமாற்றம் தெரிவித்தனர்.
அடுத்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 8ஆம் தேதிவரை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் உலகின் 5ஆம் நிலை ஆட்டக்காரரான Lee zii jia பதக்கம் பெறும் பிரகாசமான வாய்ப்பை கொண்டிருக்கும் சூழ்நிலையில் அவர் அப்போட்டியில் கலந்துகொள்ளாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக Gerard Monteiro கூறினார்.
எனினும் அவரது விலகல் மலேசிய பேட்மிண்டன் குழுவின் இதர ஆட்டக்காரர்களின் தயார் நிலையை பாதித்துவிடக்கூடாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன் Gold Coast ட்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் மலேசிய பேட்மிண்டன் குழுவினர் 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.