Latestஉலகம்விளையாட்டு

காமன்வெல்த் போட்டி மேலும் 2 தங்கப் பதக்கத்திற்கு பியர்லி டான் – எம். தீனா இலக்கு

பெர்மிங்ஹாம், ஆக 4 – காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் மேலும் இரண்டு தங்கப் பதக்கங்களுக்கு மலேசியாவின் மகளிர் இரட்டையர் ஜோடியான
பியர்லி டான்- எம்.தீனா குறிவைத்துள்ளனர். அனைத்துலக ரீதியில் நல்ல அனுபவத்தை கொண்டிருப்பதால் இரட்டையர் பிரிவு மற்றும் மகளிர் குழு பிரிவிலும் இரண்டு தங்கப் பதங்கங்களை பெறுவதற்கு கடுமையாக போராடப் போவதாக அவ்விருவரும் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவை வீழ்த்தி தங்கம் வென்ற மலேசியா குழுவினர் குறைந்தது மேலும் நான்கு தங்கப் பதக்கங்களை பெறமுடியும் என தேசிய பேட்மிண்டன் குழுவின் பயிற்சி இயக்குனர் ரெக்ஸி மைனாகியும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

இந்தியக் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் அவ்விருவரும் வெளிப்படுத்திய சிறந்த விளையாட்டை தொடர்ந்து மகளிர் இரட்டையர் பிரிவிலும், குழு பிரிவிலும் மலேசியா தங்கப் பதக்கத்தை பெறும் வாய்ப்பு இருப்பதாக ரெக்ஸி கூறியுள்ளார். இதனிடையே ஆண்கள் குழு பிரிவு, தனிப்பட்டோருக்கான ஒன்றையர் மற்றும் இரட்டைர் பிரிவிலும் மேலும் இரண்டு தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பும் இருப்பதாக அவர் கூறினார். அந்த மூன்று பிரிவுகளிலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து விளையாட்டாளர்கள்தான் மிரட்டலாக இருக்கின்றனர். எனினும் முழு முயற்சியோடு நம்பிக்கையோடு களத்தில் இறங்கினால் அவர்களை வீழ்த்த முடியும் என ரெக்ஸி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!