Latestமலேசியா

அகில இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியின், முதல் சுற்றில் லீ ஷி ஜியா வெற்றி

கோலாலம்பூர், மார்ச் 14 – அண்மையில் இரண்டு அனைத்துலக போட்டிகளில் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்த பின்னர், அகில இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் நாட்டின் முன்னணி ஒற்றையர் பேட்மிண்டன் விளையாட்டாளரான லீ ஷி ஜியா இரண்டாவது சுற்றுக்கு தேர்வு பெற்றார்.

அவர் 21 -12. 21 -19 என்ற புள்ளிக் கணக்கில் ஜப்பானின் ‘Kodai Narooka’-வை வீழ்த்தினார்.

இந்த வெற்றியை பெறுவதற்கு கடுமையாக போராடிய லீ ஷி ஜியா இரண்டாவது சுற்றில் சிங்கப்பூரின் உலகச் சாம்பியன் லோ கீன் யூ வுடன் மோதவிருக்கிறார்.

இதனிடையே மகளிர் இரட்டையர் பிரிவில் தேசிய பேட்மிண்டன் வீராங்கனைகளான பேர்லி தான் – எம்.தினா ஜோடியும் முதல் சுற்றில் தடையை முறியடித்து இரண்டாம் சுற்றுக்கு தேர்வு பெற்றனர்.

பேர்லி தான் – எம்.தினா இணை 21 -10. 21-10 என்ற புள்ளிக் கணக்கில் மலேசியாவின் விவியன் ஹூ – லிம் செவ் சியென் ஜோடியை வீழ்த்தினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!