Latestமலேசியா

காய்கறிகள் பாத்திரத்தில் கரப்பான் பூச்சிகள்; நாசி கண்டார் உணவகத்தை மூட உத்தரவு

ஜியோர்ஜ்டவுன், செப்டம்பர் -1, பினாங்கு, ஜியோர்ஜ்டவுன் நகரில் பிரபலமான நாசி கண்டார் உணவகத்தை 14 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

குளிர்சாதனப்பெட்டியில் காய்கறிகளை வைக்கும் பாத்திரத்தில் கரப்பான் பூச்சிகள் மேய்ந்து கொண்டிருப்பது, சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, Bukit Jambul-லில் அமைந்துள்ள அவ்வுணவகத்துக்கு அவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அருகிலிருக்கும் வெளிநாட்டவர்களின் கூடுமிடமான Kopitiam கடைக்கும் அதே நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அக்கடையில் பானங்களைக் கலக்கும் இடத்திலும், எண்ணெய் வடித்தட்டிலும், சுவரிலும் கரப்பான் பூச்சிகள் மேய்ந்து கொண்டிருந்தன.

Op Merdeka சோதனையின் போது, அசுத்தமாக இருந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக மூட உத்தரவிடப்பட்ட 6 கடைகளில் அந்த நாசி கண்டார் உணவகமும் Kopitiam-மும் அடங்கும்.

சோதனைக்குத் தலைமையேற்ற தீமோர் லாவோட் மாவட்ட சுகாதார அலுவலகத்தின் உணவுத் தரம் மற்றும் பாதுகாப்பு பிரிவு அதிகாரி M.ஷஷிகுமரன் (M.Shashikumaran) அதனைத் தெரிவித்தார்.

காலாவதியான பிஸ்கட்டுகள், தின்பண்டங்கள், பால் சார் பானங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களும் அதன் போது பறிமுதல் செய்யப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!