
கோம்பாக், மார்ச் 13 – கோம்பாக் , Desa Jaya அடுக்குமாடி குடியிருப்பில், மேல் தள கார் நிறுத்துமிடப் பகுதியின் சுவரை, கார் ஒன்று மோதி பாதி அந்தரத்தில் தொங்கியது .
அந்த சம்பவத்தில் , காரோட்டியான 67 வயது முதியவருக்கு லேசான காயங்களே ஏற்பட்டது .
கால் விரிப்புக்கு இடையில், எண்ணெய் மிதி மாட்டிக் கொண்டதால், அந்த முதியவரால் தனது Nissan Sentra காரை நிறுத்த முடியாமல் போனதாக, கோம்பாக் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் Noor Ariffin Mohamad Nasir தெரிவித்தார்.