Latestமலேசியா

காரின் மீதிருந்த பொருள் வெடித்து உணவக பணியாளர் மரணம் ; தம்பதியர் மீது கொலை குற்றச்சாட்டு

அம்பாங், ஜன 16 – கடந்த மாதம் , உணவக ஊழியர் ஒருவரைக் கொலை செய்தததாக கணவன் மனைவி மீது இன்று அம்பாங் மாஜிஸ்திரேட் நீதுமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
தங்களது மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, அதைப் புரிந்துக் கொண்டதாக , 33 வயது Khor Swee Boon- னும், 30 வயதான அவரது மனைவி Ng Hui Yee- யும் தலையசைத்தனர்.

இந்த வழக்கு, உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால், அவ்விருவரிடம் இருந்து எந்தவொரு வாக்குமூலமும் பெறப்படவில்லை.
கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி , Pandan Indah – வில், தனது காரின் மீது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொருள் வெடித்து, 29 வயதான Cho Lim Fong எனும் ஆடவர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!