Latestமலேசியா

காரின் மீது விழுந்த மரக்கிளைகளை அகற்ற தீயணைப்பு வீரர்களை மறுத்த ஆடவர்

ஷா ஆலாம், மார்ச் 29 – தனது காரின் மீது விழுந்த மரக்கிளைகளை அகற்ற , தீயணைப்பு வீரர்களை காரோட்டி விடாப்பிடியாக மறுத்த சம்பவம், நேற்றிரவு ஷா ஆலாம், கோத்தா கெமுனிங் பகுதியில் நிகழ்ந்தது.

சம்பவ இடத்திற்கு, ஷா ஆலாம் நகராண்மைக் கழக அதிகாரிகள் வரும் வரை காத்திருப்பதால், தங்களது உதவியை அந்த காரோட்டி மறுத்து விட்டதாக, சிலாங்கூர் தீயணைப்பு மீட்பு படையின் இயக்குநர் Morni Mamat தெரிவித்தார் .

நகராண்மைக் கழகத்திடம் இருந்து இழப்பீடு கோருவதற்காக, அந்த காரோட்டி அவ்வாறு நடந்துக் கொண்டதாக அவர் கூறினார்.
அதையடுத்து, காருக்கு அருகில் கிடந்த மரக்கிளைகளை மட்டும் தீயணைப்பு வீரர்கள் அகற்றிச் சென்றதாக அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!