
மஞ்சோங், பிப் 7 – சித்தியவான் , Seri Manjungகிலுள்ள பேரங்காடிக்கு முன் நிறுத்திவைக்கப்பட்ட காரில் ஒரு வயது இரண்டு மாத குழந்தை சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேரங்காடியிலிருந்து வாங்கிவந்த பொருட்களை தமது Hyundai காரில் வைத்துக் கொண்டிருந்தபோது அக்கார் பூட்டிக்கொண்டதால் Nur Ayyash Mikail எனும் அக் குழந்தை காரில் சிக்கிக்கொண்டது. சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சிறப்பு சாதனத்தின் மூலம் அக்காரை திறந்து அக்குழந்தையை மீட்டெடுத்தனர்.