Latestமலேசியா

தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிரான கல்வியாளரின் இனத்துவேச டிக் டோக் உரை; விசாரணைக்கு மெத்தேக்கா டைம்ஸ் ஊடக உரிமையாளர் அழைக்கப்படுவார்

கோலாலம்பூர், மார்ச் 10 – தாய்மொழிப் பள்ளிகள் தொடர்பில் கல்வியாளர் தியோ கோக் சியோங்கின் இனத்துவேச பேச்சைக் கொண்டதாக கூறப்படும் டிக் டோக் காணொளியை வெளியிட்டது தொடர்பில் மெர்டேகா டைம்ஸ் ஊடக உரிமையாளர் ஃபிர்தௌஸ் வோங் வாய் ஹங் அடுத்த வாரம் போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். தியோவின் அறிக்கையை வெளியிட்டது மற்றும் அந்த அறிக்கை இனத்துவேசத்தை தூண்டுவதாக செபுதே நாடாளுமன்ற உறுப்பினர் முத்திரை குத்தியிருப்பது குறித்து தி மெர்டேக்கா டைம்ஸ்-சின் உரிமையாளர் என்ற முறையில் தாம் போலீசிற்கு ஒத்துழைப்பு வழங்குவேன் என ஃபிர்தௌஸ் வோங் கூறியுள்ளார். “மெர்டேகா டைம்ஸ் மற்றும் நானும் தியோ வின் அறிக்கையை பாதுகாப்போம் என அவர் தெரிவித்தார்.

பிப்ரவரி 29 ஆம் தேதியன்று மெர்டேகா டைம்ஸ் வெளியிட்ட டிக் டோக் காணொளியில் ஆற்றல் குறைந்த சீன மாணவர்கள் மாண்டரின் மொழியில் மட்டுமே தேர்ச்சி பெறுவதால், பிற இனத்தவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தடுப்பதாக கூறியிருந்தார். சீனப் பள்ளிகள் மலாய்க்காரர்களுக்கு எதிராக இனவெறியைப் பிரச்சாரம் செய்வதாகக் மார்ச் 4ஆம் தேதி கூறியிருக்கும் தியோ வை விசாரிக்குமாறு தெரசா கோக் போலீசை கேட்டுக்கொண்டுள்ளார்.

தியோ வின் அறிக்கையை கண்டித்து, அவர் நிச்சயமாக உண்மைகளை திரிப்பதாகவும், மலாய் சமூகத்திற்கும் சீன சமூகத்திற்கும் இடையிலான உறவை சிதைப்பதாகவும் நாடாளுமன்றத்தில் அரச உரை மீதான விவாதத்தின்போது ஆற்றிய உரையில் தெரசா கோக் கூறியிருந்தார். மார்ச் 6 ஆம்தேதியன்று சீனப் பள்ளிகள் மலாய்க்காரர்களுக்கு எதிராக இனவெறியைப் பிரச்சாரம் செய்கின்றன என்ற தியோவின் கூற்றை தெரசா கோக் கடுமையாக சாடினார். மேலும் இது சமூகங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தக்கூடிய இனவெறி வெறுப்பு பேச்சு என்று குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!