Latestமலேசியா

காருக்குள் நீர் புகுவதை கவனிக்காமல் கடற்கரையில் வீடியோ எடுப்பதில் மும்முரம் !

கோத்தா திங்கி, மார்ச் 10 – ஜோகூர், கோத்தா திங்கி , Pantai Temalah கடற்கரைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Mazda CX5 காரொன்று , கடலுக்குள் அடித்துச் செல்லப்படவிருந்தது .

அதிகாலை மணி 2 அளவில், கடற்கரையில் காரை நிறுத்தி விட்டு, புகைப்படமும் வீடியோ பதிவும் எடுக்க சென்றுவிட்ட மூவர், பின்னர் திரும்பி வந்தப் பின்னர் காருக்குள் நீர் புகுந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். அத்துடன் காரின் டயர்களும் மண்ணுக்குள் இறங்கியிருந்தன.

நீர்ப்பெருக்கினால், அந்த காரை வெளியேற்ற முடியாததால், பாதிக்கப்பட்ட அந்த நபர்கள் போலீஸ் உதவியை நாடியதாக , கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் Hussin Zamora தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!