
சிலாங்கூர், ஜன 10 – சிலாங்கூர், பூச்சோங்கில், பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற காருக்கு அடியில் மலைப்பாம்பு ஒன்று புகும் காணொலி ஒன்று வைரலாகியுள்ளது.
சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள, சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் அந்த பெண் காரை நிறுத்தியபோது “பூட்” வாயிலாக அந்த மலைப்பாம்பு காருக்குள் ஏறுவதை பொதுமக்கள் கண்டுள்ளனர்.எனினும், அச்சம்பவத்தை கண்ட மற்றொரு வாகனமோட்டி கூறும் வரையில், சம்பந்தப்பட்ட காரை செலுத்திய பெண் அப்பாம்பின் வருகையை உணரவில்லை.
மாலை மணி 5.34 வாக்கில் அவசர அழைப்பு கிடைத்ததை அடுத்து, காரின் அடிப்பகுதியில் பதுங்கி இருந்த இரண்டு மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு மீட்புப் படையினர் மீட்டனர். சம்பந்தப்பட்ட காரை செலுத்திய பெண் காயம் எதுவும் இன்றி உயிர்தப்பினார்.