Latestமலேசியா

காரையும், லோரியையும் உட்படுத்திய சாலை விபத்தில், காப்புறுதி முகவர்கள் இருவர் உயிரிழந்தனர்

மலாக்கா, ஜாசினில், கார் ஒன்று கொள்கலன் லோரியை மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், காப்புறுதி முகவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதிகாலை மணி ஐந்து வாக்கில், சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் நிகழ்ந்த அவ்விபத்தில், Toyota Vios ரக காரின் ஓட்டுனரான 31 வயது பட்ரூல் ஷாம் நோர் இப்ராஹிமும், 33 வயது ஏசாம் ஹசிம் அஹ்யாட்டும் உயிரிழந்தனர்.

சமிக்ஞை விளக்கை பின்பற்றி ஜாசின் நோக்கி சென்ற லோரியை, எதிர்புறத்தில் வந்த கார் மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!