Latestஇந்தியா

காரை இடித்த தள்ளுவண்டி; பழங்களைச் சாலையில் தூக்கியெறிந்த பெண்மணி

போபால், ஜன 12- தனது காரை இடித்ததற்காக, தள்ளுவண்டிக்காரரின் பழங்களைச் சாலையில் தூக்கியெறிந்து ஆவேசமாக நடந்துகொண்ட பெண்மணி ஒருவரின் செயல் சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

மத்திய பிரதேசம், போபால் மாவட்டத்தில் உள்ள அயோத்தியா நகரில் நிகழ்ந்த இச்சம்பவத்தை அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் படமெடுத்தனர்.

சம்பந்தப்பட்ட காணொளியில், அப்பெண் விடுவிடுவென காரிலிலிருந்து இறங்கி வந்து தள்ளுவண்டியில் உள்ள பப்பாளிப் பழங்களை சாலையில் வீசியெறிவதைக் காண முடிகின்றது.

தள்ளுவண்டிக்காரர் கெஞ்சிக் கேட்டும் அந்தப் பெண்மணி கேட்பதாக இல்லை. சாலையில் சென்ற மோட்டார் சைக்கிளோட்டிகள் அவரைக் கண்டித்தபோதிலும், அச்செய்கையை அவர் தொடர்ந்து செய்தபின் அங்கிருந்து கிளம்பினார்.

அப்பெண்மணி, தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிவதாகக் கூறப்படுகின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!